இந்தி எதிர்ப்பு தீர்மானம்; விசாரணை அறிக்கைகளால் பழனிசாமி தரப்பினர் அச்சம் - சபாநாயகர் அப்பாவு
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை கண்டு அ.தி.மு.க.பயந்துவிட்டது. அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையைக் கண்டு அ.தி.மு.க. அஞ்சுகிறது என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னை
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.
சட்டசபையின் முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
2 வது நாளாக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடிய்து இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்றுதாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று சபை கூடியது எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்
இதை தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேசும் போது கூறியதாவது:-
சடச்சபையில் 2 அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவதால் அச்சத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர்.
இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாததால் அதிமுகவினர் திட்டமிட்டு கலகம் செய்கின்றனர்.
பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பேச்சுக்கள் எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என என சபாநாயகர் அறிவித்தார்.