போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
Related Tags :
Next Story