போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரக்கோணத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் அசோக் யாதவ் தொடங்கி வைத்தார்.
அரக்கோணம்
அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் மற்றும் சி.எஸ்.ஐ. சென்ட்ரல் மேல்நிலை பள்ளி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி, கலால் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் அசோக் யாதவ் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைக்கும், குடி பழக்கத்திற்கும் யாரும் அடிமையாகக் கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணர்வு வாசக பதாகைகளை கையில் பிடித்தபடி விழிப்புணர்வு கோஷம் எழுப்பிபடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை சென்றனர்.
இதில் போலீஸ் சப்-இன்ஸ்டக்டர்கள் தினேஷ், கிளாரா, தனிப்பிரிவு போலீசார் சிவகுமார் மற்றும் போலீசார், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.