கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு


கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு
x

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர்:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினமான மே 21-ந்தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 21-ந்தேதி சனிக்கிழமையான இன்று வருவதால் நேற்று அரியலூர் மாவட்டத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் கொடுஞ்சயெல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியினை அனைத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகரன் தலைமையில் போலீசார் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Next Story