புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சவேரியார்புரம் ஆர்.சி. நடுநிலைபள்ளியில் புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தட்டாா்மடம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சவேரியார்புரம் ஆர்.சி. நடுநிலைபள்ளியில் புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், டெங்கு காய்ச்சல் அறிகுறி குறித்தும், தடுக்கும் நடவடிக்கை குறித்தும், சுகாதார ஆய்வாளர் மகேஸ்குமார் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைக்கள் மற்றும் அதனை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி வளாகம், சுற்றுப்புறத்தை பார்வையிட்டு தலைமை ஆசிரியர் விண்ணரசியிடம் சுகாதார தடையின்மை தரச்சான்று வழங்கப்பட்டது. பள்ளியை சுற்றியுள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்க கூடாது என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story