போர் எதிர்ப்பு தின நிகழ்ச்சி


போர் எதிர்ப்பு தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Aug 2023 1:30 AM IST (Updated: 6 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் போர் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், ஹிரோஷிமா தினம், போர் எதிர்ப்பு தினமாக ஊட்டியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூமி தோன்றிய நாள் முதல் இன்று வரை நடைபெற்ற போரில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பள்ளி மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். வயலின் இசை கலைஞர் ஜோசுவா ரோசனின் மெல்லிசை நிகழ்ச்சியை தொடர்ந்து, சர்வ மத பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தூய திரித்துய ஆலய பங்கு தந்தை ஜெரி ராஜ்குமார், பாம்பே கேசில் பள்ளி வாசல் பிரதிநிதி ரிஸ்வான், புலவர் சோலூர் கணேசன், ஜனார்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.


Next Story