பழங்கால பொருட்கள் கண்காட்சி

பழங்கால பொருட்கள் கண்காட்சி
பொள்ளாச்சி
பழங்கால பொருட்களுக்கு எப்போதும் மவுசு குறைவதில்லை. அவற்றிற்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், விரும்புபவர்கள் வாங்கி வீடுகளில் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் சாலையோரத்தில் பழங்கால பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதை பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும் சிலர் பொருட்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து பொருட்களை விற்பனை செய்யும் கேரளாவை சேர்ந்த சமீர் கூறும்போது, கோவை, திருப்பூர், கரூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பழங்கால பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். கிராம போன், மணல் கடிகாரம், திசைகாட்டி, ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் உள்ளது. இதுகுறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. எனவே அந்த பொருட்களின் பயன்பாடு, பயன்படுத்தப்பட்ட காலம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது என்றார்.