அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் - ஜெயக்குமார்


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் - ஜெயக்குமார்
x

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவதற்கான தேதி நாளை மறுநாள் முடிவடைகிறது. அதாவது வரும் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயக முறையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story