கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாசிப் பாளர்கள் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாசிப் பாளர்கள் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000-மும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3,000-மும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4,000-மும், இளங்கலை பட்டம் பட்டயப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.6,000-மும், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,000-மும், ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 75 சதவீத்திற்கு மேல் கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.3,000-மும், இளங்கலை பட்டம் பட்டயப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.5,000-மும், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6,000-மும், ஆண்டொன்றுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பம்

இந்த திட்டங்களின்கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல் மற்றும் யு.டி.ஐ.டி. நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டைநகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 9-ம் வகுப்பிற்குமேல் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல் நகலும் (40 சதவீத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்) 9-ம் வகுப்பிற்குமேல் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் வாசிப்பாளரின் விவரம் ஆகிய சான்றுகளுடன், விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story