கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம்: கலெக்டர் ஆய்வு


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம்: கலெக்டர் ஆய்வு
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் குறித்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம், நன்செய், புன்செய் நிலங்களின் விவரம், மின்சார பயன்பாடு, வாகனங்கள் விவரம், பிற ஓய்வூதியங்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். இதேபோன்று மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் நேரடி ஆய்வு செய்வதை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்து, அவர்களிடம் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை முறையாக சரிபார்த்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். பின்னர் அவர் வெங்கடகிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையத்தினையும், கயர்லாபாத் ஊராட்சி அரசு நகரில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அரசு நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நர்சரி கார்டனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story