மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

2022-23-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

மணிமேகலை விருது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசாணையின்படி ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிட்டுள்ளார்.

30-ந்தேதிக்குள்

மணிமேகலை விருது தேர்வுக்கான (தகுதி அடிப்படையிலான 4 தகுதிகள் மற்றும் 6 மதிப்பீட்டு காரணிகள் குறித்து) அரசாணையின்படி மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு தொகுதி அளவிலான கூட்டமைப்பு போன்றவை விருதுக்காக தேர்வு செய்யும் செய்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இந்த அரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே 2022-23-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story