செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

செங்கல்பட்டு

பணியிடங்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார மேலாளர் பணியிடம், மற்றும் திருப்போரூர்-2, புனித தோமையார் மலை-1, மதுராந்தகம்-1 என மொத்தம் 4 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு 1 கணினி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார மேலாளர் பணிக்கான கல்வித்தகுதி:- ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 6 மாத காலம் கணினி பயிற்சி (எம்.எஸ்.ஆபிஸ்) பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான கல்வித்தகுதி விவரம்:- ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

கணினி உதவியாளருக்கான கல்வித்தகுதி:- பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 6 மாத காலம் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும். செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

20-ந்தேதி கடைசி நாள்

விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி- இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம். செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 20-06-2023 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.


Next Story