பட்டா கோரிய விண்ணப்பங்கள் 4 மாதங்களாக முடக்கம்


பட்டா கோரிய விண்ணப்பங்கள் 4 மாதங்களாக முடக்கம்
x

பட்டா கோரிய விண்ணப்பங்கள் 4 மாதங்களாக முடக்கம் அடைந்துள்ளது.

விருதுநகர்


தமிழக அரசு வருவாய் துறை சான்றிதழ்கள் மற்றும் பட்டா ஆகியவற்றிற்கு தாலுகா அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கும் நடைமுறையில் பல முறைகேடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் அதனை தவிர்க்க ஆன்லைன் முறையில் வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் பட்டா கோரி விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதுவும் தற்போது இதற்காக ஒரு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் விருதுநகர் அருகே உள்ள சின்ன பேராலி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த டிசம்பர் 2022-ல் பட்டா கோரி ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அவரது விண்ணப்பம் சர்வேயரிடம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அங்கிருந்து அடுத்த நிலைக்கு நகர்வதற்கு இயலாத நிலையில் உள்ளது. இது குறித்து அந்த விவசாயி சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த நோக்கத்திற்காக அரசு ஆன்லைன் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளதோ அந்த நடைமுறைக்கு முரணான நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் விவசாயி தொடர்ந்து காத்திருக்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கப்பட்ட பட்டா மற்றும் சான்றிதழ் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலித்து சான்றிதழ்கள் மற்றும் பட்டா வழங்கப்படாத நிலை இருந்தால் அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை முடக்கி வைத்துள்ள அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story