பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்


பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை

கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள பிறப்பு சான்றிதழில் பெயர் இடம் பெறாத பிறப்பு பதிவுகளுக்கு குழந்தையின் பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 2024-ம் ஆண்டு வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் சேர்க்க, குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு, விசா மற்றும் அயல்நாடுகளில் குடியுரிமை பெற பெயருடன் கூடிய பிறப்புச்சான்று மிகவும் அவசியம். குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் கட்டணமின்றி குழந்தை பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்த தேதியிலிருந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனால் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்யலாம். குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே பெயர் பதிவு செய்ய இயலும்.

தற்போது, 2000 ஜனவரி 1-ம் தேதிக்கு முன் பிறந்த பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் குழந்தை பிறந்து பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பூ்ர்த்தியான பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்ய வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு பெயரை பதிவு செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தில் சான்றுடன் விண்ணப்பித்து ரூ.200 கால தாமத கட்டணமாகவும், சான்று நகல் ஒன்றுக்கு ரூ.200 செலுத்தி பிறப்புச்சான்று பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story