புதிதாக தொழில் தொடங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்


புதிதாக தொழில் தொடங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்:

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் தொடங்க கடன் உதவி

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக கடன் உதவி பெற்று புதிதாக தொழில் தொடங்க ஆர்வமிக்க தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் உதவி பெற்று தொழில் தொடங்கலாம்.

வயது வரம்பு இல்லை

திட்டத்தின் கீழ் பயன் பெறவிரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வி தகுதி தேவையில்லை. இதற்கு அதிகமான மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயம், போக்குவரத்து, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு போன்ற பண்ணை சார்ந்த தொழில்கள், புகையிலை, பாலித்தீன் பைகள் உற்பத்தி (20 மைக்ரானுக்குகுறைவு) தொழில்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படமாட்டாது. திட்டத்தின் கீழ் வங்கியால் ஓப்புதல் அளிக்கப்பட்டதொழில் திட்டங்களுக்கு அதிகப்பட்சமாக நகர்புறத்தில் 25 சதவீதம், கிராமபுறத்தில் 35 சதவீதமும் மானியமாகவழங்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சொந்த மூலதனம் பொதுபிரிவினருக்கு திட்டமதிப்பீட்டில் 10 சதவீதமும் மற்ற பிரிவினருக்கு 5 சதவீதம் ஆகும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in/ என்கிற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


1 More update

Next Story