வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 July 2023 3:32 PM IST (Updated: 6 July 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்து உள்ளார்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அவினாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்எஸ் ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்று இருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு இதுபோன்ற திட்டங்களில் பணிபுரிந்து இருக்க வேண்டும். முன்அனுபவம் குறிப்பிட்டுள்ள காலத்தில் நற்பணியாற்றியிருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு வருகிற 20-ந் தேதியும், நேர்முகத்தேர்வு வருகிற 24-ந் தேதியும் நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், நம்பர்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641 604 என்ற முகவரிக்கு வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971149 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story