இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்


இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
x

இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2022-23-ம் நிதியாண்டிற்கான, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட குடும்ப ஆண்டு வருமான சான்று (ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்), இருப்பிட சான்று, விதவை சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள், தையல் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்றுகள் இருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296209 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story