தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்


தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
x

தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை கரூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திலும் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்புமாறும், இந்த விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 31-ந்தேதி வரை அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story