கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்ணுக்கு அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்புகளுடன் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் 27-ந்தேதிக்குள் கொடுக்கலாம். இந்த விருதுக்கு தகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story