நுண்ணீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


நுண்ணீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x

நுண்ணீர் பாசன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

பாசன மானியம்

கரூர் மாவட்டத்தில் தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் 3 ஆண்டுகளில் நுண்ணீர் பாசன மானியம் பெறலாம். பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் விவசாயிகள் தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.முதல் முறை மானியத்தில் கருவிகள் பெற்றபின் அதே வயலுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் மானியம் பெற முடியும்.

விண்ணப்பிக்கலாம்

தற்போது இதனை 3 ஆண்டுகளாக அரசு குறைத்துள்ளது. இதனால் தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் அமைத்த விவசாயிகள் மீண்டும் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 7 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை.தற்போது பயன்பாட்டில் உள்ள தெளிப்பு நீர் பாசன அமைப்பினை சொட்டுநீர் பாசனமாக மாற்றுவதற்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in ல் MIMIS என்ற வலையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என கரூர் தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.


Next Story