ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
x

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம்

டேராடூன் ராணுவக்கல்லூரியில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களில் சிறுவர் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1.1.2024 அன்று 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயது ஆகாதவராகவும் இருக்க வேண்டும். 2.1.2011-க்கு முன்னதாகவும், 1.7.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது விண்ணப்பதாரர் ராணுவ கல்லூரியில் அனுமதிக்கப்படும் போது அதாவது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்கவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 2 நகல்களாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணையதளம்

இ்ந்த விண்ணப்பங்களை வருகிற 15-ந் தேதி மாலை 5:40 மணிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வுக்கான விண்ணப்ப படிவம், எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், தகவல் தொகுப்பேடு முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்பை பெற பொது பிரிவினர் ரூ.600 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.555-க்கான காசோலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கி குறியீடு 01576, டெல்பவன் டேராடூன், உத்தரகாண்ட், கமாண்டன்ட் உத்தரகாண்ட் 248003 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாக மேற்படி தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தோர் விவரத்தினை ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் அல்லது 04563- 296382 என்ற டெலிபோன் எண் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story