புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்


புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்
x

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

விருதுநகர்

பிற மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தமாக விருதுநகர் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இணையதளத்தில் பதிவு செய்த தகுதியான தொழிலாளர்களில் இதுநாள் வரை ரேஷன் கார்டு பெறாத தொழிலாளர்களுக்கு புதிய மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.எனவே பிற மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தமாக விருதுநகர் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் இதுவரை புதிய மின்னணு ரேஷன் கார்டு பெறாத தொழிலாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.பின்னர் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து உரிய படிவத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தி புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.


Next Story