ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
x

வருகிற 15-ந் தேதிக்குள் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

50 சதவீத மதிப்பெண்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாத பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்- சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும்.

எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற நேர்முக தேர்வு உட்பட குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை "கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் 248 003" என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி இணையவழி (பொது பிரிவினர் ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555) செலுத்தி பெற்று கொள்ளலாம்.

மாலை 5.45 மணிக்குள்...

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1-1-2024 அன்று 11 ½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 2-1-2011-க்கு முன்னதாகவும் 1-7-2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்க கூடாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1-1-2024-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story