வட்டார வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வட்டார வள பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 13 வட்டார வள பயிற்றுனர்கள் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். வயது 31.7.2023 வரையில் 25 முதல் 45 வயதிற்கு கீழ் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். ஏற்கனவே வட்டார வள பயிற்றுனராக பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் (மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரில்), விழுப்புரம்- 605 602 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுப்பலாம். விண்ணப்பங்கள் அளிக்க வருகிற 16-ந் தேதி(புதன்கிழமை)கடைசி நாள் ஆகும். மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.