தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபரின் புகைப்படம், ஆதார் அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், கடை வைக்கும் இடம் சொந்த கட்டிடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடம் பெற்ற பலவகை வரி ரசீது, சுய உறுதி மொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகிற 24-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.