சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' கடந்த 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம் விருது தொகை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை உள்ளடங்கியதாக இந்த விருது வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருது பெற தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள், அதன் மூலம் எட்டிய சாதனைகள் போன்ற தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story