திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்


திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் அமைந்துள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் அலுவலக உதவியாளர், எழுத்தர், வரவேற்பாளர் மற்றும் கணினி இயக்குனர், அலுவலக உதவியாளர் முழுநேர பணியிடங்கள் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணியிடங்கள், தகுதிகள் போன்ற விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை https://districts.ecourts.gov.in/tiruvallur என்ற இணையதளத்தை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.

மேற்கண்ட பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 18-ந்தேதிக்குள், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு பதிவு தபாலிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ சென்று அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி தெரிவித்துள்ளார்.


Next Story