மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்


மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்
x

மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்கான மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை

கண்காட்சி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினை பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற பொருட்களும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகளை விற்னைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களுக்கு அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் இம்மாதம் 20-ந் தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login. என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story