பா.ஜனதா கட்சி துணைத் தலைவர் நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா கட்சி துணைத் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொறையாறு:
தமிழ்நாடு மாநில பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பா. ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவராக பொறையாறு நாடார் எஸ்டேட்டை சேர்ந்த டி.ஜி.ஆர்.ஜெ.விஜயாலயனை நியமித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலை, இவரை பரிந்துரை செய்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் விநாயகம்ஜி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோருக்கு கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் டி.ஜி.ஆர்.ஜெ. விஜயாலயன் நன்றி தெரிவித்துக்கொண்டார். சென்னையில் பி.ஏ.வைஷ்ணவிசம் படித்துள்ள இவர் கல்லூரி காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தார். பிறகு 2011-ம் ஆண்டு முதல் பா.ஜனதா காட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் பொறையாறு விஸ்வநாதர் கோவில், குமரக்கோவில், அய்யனார் கோவில், கோதண்டராம சாமி கோவில் தரங்கம்பாடி சிந்தாதுறை பிள்ளையார் கோவில் ஆகிய கோவில்களுக்கு நிர்வாகியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.