புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் நியமனம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுபினர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுபினர்களை நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த காத்திகேய சிவசேனாதிபதி தலைவராகவும், மொரிசியஸ் நாட்டை சேர்ந்த ஆறுமுக பரசுராமன், லண்டனை சேர்ந்த முகமது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவேல் வேல்நம்பி, சிங்கப்பூரை சேர்ந்த கோபால் கிருஷ்ண வெங்கட்ராமன், மும்பையில் சிகிச்கும் மீரான், சென்னை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அரசு சார்ந்த உறுப்பினர்களாக பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், வெளிநாடு மற்றும் வெளிமாநில வாழ் தமிழர்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.