திருச்சி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் இடத்தை ஆய்வு செய்ய ஆணையர் நியமனம் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


திருச்சி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் இடத்தை ஆய்வு செய்ய ஆணையர் நியமனம் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
x

திருச்சி ஆதிபராசக்தி சித்தர் பீடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய ஆணையரை நியமித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்சி மாவட்டம் திருவண்ணைக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி மாவட்டம், திருச்சானூர் மாவட்டம் கணபதி நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற பிரார்த்தனை கூடம் உள்ளதாகவும், இந்த சித்தர் பீடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றுவதற்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டதா? அல்லது தனிப் பட்டா கட்டப்பட்டுள்ளதா? விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமனம் செய்து உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கறிஞர் ஆணையர் குறிப்பிட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர்கள் ஆய்வுக்கு உரிய ஆவணங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், இந்த ஆய்வின் அறிக்கையை செப்டம்பர் 27-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story