117 பேருக்கு பணி நியமன ஆணை


117 பேருக்கு பணி நியமன ஆணை
x

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற 117 பேருக்கு பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழங்கினார்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 77 ஆண்கள், 40 பெண்கள் என மொத்தம் 117 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வரவழைத்து பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பணி நியமன ஆணைகளை வழங்கி பயிற்சியை சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.


Next Story