குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு


குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற குடியரசு தினவிழாவில் மாணவர்கள் சார்பில் நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர் செல்லமுத்து தேர்வு செய்யப்பட்டார். இதற்காக மாணவர் செல்லமுத்துவிற்கு பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் அணிவகுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசு தின மாணவர்கள் அணிவகுப்பில் மாணவர் செல்லமுத்துவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். மேலும் மாணவர் செல்லமுத்துவை அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருணாச்சலம், பள்ளி தலைமையாசிரியர் பிரிட்டோ, திட்ட ஒருங்கிணைப்பாளர் தயானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Next Story