அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா


அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
x

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் மணிமேகலை முன்னிலை வகித்தார். இந்த விழாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ-மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் 30 பேருக்கும் என மொத்தம் 65 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், கிழக்கு மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் வெங்கட்டப்பன், பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமி மனோகரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story