மாணவிகளுக்கு பாராட்டு விழா


மாணவிகளுக்கு பாராட்டு விழா
x

கம்பத்தில் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

தேனி

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியை சேர்ந்த 42 மாணவிகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி சார்பில் நடந்த மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதில் முதலாமாண்டு தமிழ் இலக்கியத் துறையை சேர்ந்த மாணவி மாயா முதல் இடத்தையும், 3-ம் ஆண்டு வணிக மேலாண்மையியல் துறையை சேர்ந்த மாணவி சாருமதி 4-ம் இடத்தையும், 2-ம் ஆண்டு வணிக மேலாண்மையியல் துறையை சேர்ந்த மாணவி கிருபா 5-ம் இடத்தையும் மற்றும் அதே துறையை சேர்ந்த மாணவி ரித்திகா 6-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவன செயலர் கம்பம் ராமகிருஷ்ணன், இணைச்செயலர் வசந்தன், முதல்வர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் சுசிலா, உடற்கல்வி ஆசிரியை சூர்யபிரபா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.

1 More update

Next Story