மாணவர்களுக்கு பாராட்டு விழா
ஆற்காடு மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ராணிப்பேட்டை
சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 6-ம் ஆண்டு சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டி அனைத்து கிளைகளிலும் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டியில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற 3-ம் வகுப்பு ஹரினிஷ் கிருஷ்ணா, 6-ம் வகுப்பு பார்த்திபன், 4-ம் வகுப்பு ஜாஸ்பர் ஜபராஜ், 8-ம் வகுப்பு ஹரணி ஆகிய மாணவ- மாணவிகளுக்கு சித்திஸ்வரர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மாணவ- மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
Related Tags :
Next Story