தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா


தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா
x

செங்கோட்டையில் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் வைத்து செங்கோட்டை நகராட்சி - நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தன்னார்வலா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளா் பார்கவி, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், நகர்நல மைய மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடா்ந்து திடக்கழிவு மேலாண்மையில் தங்களது பங்கினை சிறப்பாக செயல்படுத்தி வருபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மையை முழு பங்களிப்புடன் சிறப்பாக செய்து வரும் தூய்மை பணியாளர்கள், தனியார் தூய்மை பணியாளர்கள், குடியிருப்போர் நலசங்கம், உணவகங்கள், மருத்துவமனைகள், மற்றும் பள்ளிகள் கண்டறியப்பட்டு பங்களிப்பு மற்றும் சேவையை பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், சுடர்ஒளி ராமதாஸ், மேரிஅந்தோணிராஜ், முத்துப்பாண்டி, சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், காளியப்பன், மாரிமுத்து, செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் மற்றும் உறுப்பினா்கள், நூலகர் இராமசாமி, மழை நண்பா்கள் குழு உறுப்பினா்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். முடிவில் சுகாதார மேற்பார்வையாளா் காளியப்பன் நன்றி கூறினார்.


Next Story