துளிர் திறனறிதல் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
துளிர் திறனறிதல் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
பொள்ளாச்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில அளவில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இதில் 37 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியை சுகந்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த தேர்வு குறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா கூறும்போது, இந்த தேர்வு மூலம் மாணவ-மாணவிகள் அறிவியல் திறமையை வெளிப்படுத்தி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. மேலும் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு உதவியாக அமையும் என்றார்.
இந்த பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த துளிர் திறனறிதல் தேர்வில், 200 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு விஞ்ஞான சுடர் என்ற நூல் வழங்கப்பட்டுள்ளது. அதில் அறிவியல் ஆய்வு கட்டுரைகள், கண்டுபிடிப்புகள், புதிர்கள், அறிவியல் அறிஞர்கள் பற்றிய செய்திகள், தகவல்கள், செய்து பார்ப்போமா? என்ற எளிய அறிவியல் பரிசோதனைகள், குறுக்கெழுத்து புதிர் போன்றவை இருக்கும். இதை படிக்க வைத்து வாரத்தில் ஒருநாள் அது தொடர்பாக ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடத்தப்படுகிறது.