ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றக்கோரிய மனு மீது 3 மாதத்தில் உரிய உத்தரவு


ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றக்கோரிய மனு மீது 3 மாதத்தில் உரிய உத்தரவு
x

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றக்கோரிய மனு மீது 3 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுற்றுச்சூழல்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது.

மதுரை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருட்கள் உள்ளன. கொரோனா 2-ம் அலையின் போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றையும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைச்செயலாளர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் அங்குள்ள கழிவுகள், மூலப்பொருட்களை வெளியேற்றும் விவகாரத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டால், அதனையும் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Related Tags :
Next Story