பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு


பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் 17 மையங்களில் நடந்த தமிழக முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 5,045 மாணவ, மாணவிகள் எழுதினர். 503 பேர் தேர்வுக்கு வரவில்லை.

நாமக்கல்

திறனாய்வு தேர்வு

தமிழக முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதில் பிளஸ்-1 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வில், இடஒதுக்கீடு அடிப்படையில், 500 மாணவர், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, பிளஸ்-2 முதல் மாதம் ரூ.1,000 வீதம், 10 மாதங்களுக்கு, ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை, மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வில் 9, 10-ம் வகுப்புகளில் உள்ள கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 2 தாள்களாக நடத்தப்படும் இந்த தேர்வில் முதல் தாளில், கணிதப் பாடத்தில் இருந்து 60 கேள்விகள், இரண்டாவது தாளில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து, 60 கேள்விகள் கேட்கப்படும்.

5,045 பேர் எழுதினர்

அதன்படி நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாம் தாளும் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில், தமிழக முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு நடந்தது. அதற்காக 5,548 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில், 17 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. நேற்று நடந்த தேர்வில், மாவட்டம் முழுவதும், 5,045 தேர்வர்கள் கலந்து கொண்டனர். 503 பேர் தேர்வு எழுதவில்லை.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த தேர்வை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story