சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா


சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா
x

சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா நடைபெற்றது.

கரூர்

கரூர் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருக்கோவிலில் 62-ம் ஆண்டு மகாபரணி குருபூஜை ஆராதனை விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணியளவில் சிறப்பு ஹோமம் நடந்தது.

பின்னர் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளுக்கு 1,008 லிட்டர் பாலால் அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் சிறப்பு அலங்காரத்துடன், மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story