லாரிகள் மோதலில் ஆரணியை சேர்ந்த டிரைவர் பலி
ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஆரணியை சேர்ந்த டிரைவர் பலியானார்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஆரணியை சேர்ந்த டிரைவர் பலியானார்.
வேலூர் வழியாக பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த டிரைவர் முனிசாமி (வயது 55) ஓட்டிச்சென்றார்.
லாரி ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற மற்றொரு லாரி இந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் முனிசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று லாரியில் சிக்கியிருந்த டிரைவரின் உடலை போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.