ஆரணி நகராட்சி கமிஷனரிடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஆட்சேபனை மனு


ஆரணி நகராட்சி கமிஷனரிடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஆட்சேபனை மனு
x

அ.தி.மு.க. அலுவலகத்தை அகற்ற நோட்டீசு அனுப்பியது தொடர்பாக ஆரணி நகராட்சி கமிஷனரிடம் நகர செயலாளர் ஆட்சேபனை மனு வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து கடந்த 26-8-2022 அன்று அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமாருக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், நகர அ.தி.மு.க. அலுவலகத்தை அகற்ற வேண்டும் என அந்த அறிவிப்பு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ஆட்சேபனை விளக்க மனுவினை நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்செல்வியிடம், அசோக்குமார் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆரணி நகர அ.தி.மு.க. கட்சி அலுவலகம் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சாலை சூரிய குளத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு என்றும், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோல எந்த விதமான பிரச்சினையும் இல்லாத இடமாகும். இன்று வரை நகராட்சிக்கு சொத்துவரியும் மற்றும் மின் கட்டணமும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இந்த அறிவிப்பு தி.மு.க. காழ்ப்புணர்ச்சி காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிகிறது. இந்த விளக்க ஆட்சேபனை பெற்று தாங்கள் எண்ணத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது நகரசபை துணைத்தலைவர் பாரி பி.பாபு மற்றும் அ.தி.மு.க. நகரசபை உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.


Next Story