பா.ஜனதா நிர்வாகிகள் முயற்சியால் வெளிநாட்டில் சிக்கி தவித்த அறந்தாங்கி பெண் மீட்பு


பா.ஜனதா நிர்வாகிகள் முயற்சியால் வெளிநாட்டில் சிக்கி தவித்த அறந்தாங்கி பெண் மீட்பு
x

பா.ஜனதா நிர்வாகிகள் முயற்சியால் வெளிநாட்டில் சிக்கி தவித்த அறந்தாங்கி பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்

புதுக்கோட்டை

வீட்டு வேலைக்காக...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டிற்கு வீட்டு வேலைக்காக கலைச்செல்வி அழைத்து செல்லப்பட்டார்.

இந்தநிலையில் அவருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் அங்குள்ள ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக தனது பெற்றோருக்கு கலைச்செல்வி செல்போன் மூலம் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே கணவர் வேல்முருகன் இறந்துவிட்டார் என்ற தகவலை அவர் இருந்த இடத்தில் தெரிவித்தும் அவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே தாய்நாட்டிற்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்தனர்.

மீட்பு

இதையடுத்து கலைச்செல்வியின் பெற்றோர் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். அவர்கள் மூலம் மாநில தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர முயற்சியால் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் அறந்தாங்கி பெண் கலைச்செல்வி மஸ்கட்டில் இருந்து கொச்சின் வழியாக தமிழகம் திரும்பினார்.

இதையடுத்து, அவருக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ப ஒரு வேலையையும், ஒரு மாத காலத்திற்கு உணவு பொருட்களையும் வாங்கி தருவதாக உறுதியளித்தார்.


Next Story