அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று, நாளை மாணவர் சேர்க்கை


அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று, நாளை மாணவர் சேர்க்கை
x

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கரூர்

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023- 24-ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம்அறிவியல் பாடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். எனவே மாணவர்கள் தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் வசந்தி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.


Next Story