அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அடுத்த பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது.
தினமும் பிற்பகல் 2 மணியளவில் கோவில் முன்பு மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.
கடந்த 2-ந் தேதி முதல் தினமும் இரவில் அத்திமூர் ஞான ஒளி குழுவினரின் மகாபாரத நாடகம் நடக்கிறது.
இன்று கோவில் மைதானத்தில் தபசு மரத்தில் அர்ச்சுனன் வேடமணிந்து நாடக நடிகர் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தபசு மரத்தை சுற்றி வந்து குழந்தை வரம் வேண்டிய திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் தங்கள் திருமணம் நடைபெற வேண்டி அமர்ந்திருந்தனர்.
மேலும் தபசு மரத்தின் மீது அர்ச்சுனன் வேடமணிந்து நாடக நடிகர் தன்னிடமிருந்த கோவில் பிரசாதங்களை கீழே பக்தர்களுக்கு வீசினார். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பிடித்தனர்.
இதனை காண ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.
வருகிற 14-ந் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது 15-ந் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் கோவில் தர்மகர்த்தா ராஜேஷ் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.