நீட் தேர்வுக்கு முன் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உருவாகவில்லையா? - சீமான் கேள்வி


நீட் தேர்வுக்கு முன் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உருவாகவில்லையா? -  சீமான் கேள்வி
x

நீட் தேர்வுக்கு முன் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உருவாகவில்லையா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள் தானே என்றார்.

மேலும், உக்ரைன் போரினால் மருத்துவம் படித்த மாணவர்கள் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர். இந்தியா வந்தவர்கள் இந்தியாவில் படிப்பு தொடர் முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்தியாவில் படிக்காமல் இருப்பதே நல்லது.

மதங்கள் இல்லை என்று சொல்பவரை செருப்பால் அடிப்பேன் என்று நடிகர் மயில்சாமி கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு, மதங்கள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. எது தங்கள் சமயக் கோட்பாடு என்பதில் தான் வேறுபாடு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story