திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா?- தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு


திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா?- தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு
x

திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில், என்றென்றும் வற்றாத காசிக்கு நிகரான கங்கை தீர்த்த குளம், மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகன் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் வழியே படிக்கட்டுகள் அமைந்துள்ளது. ஆனால் படிக்கட்டுகள் சீராக இல்லாததால் மலையில் ஏறிச் செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஐ.டி.காட் நிறுவனத்தினர் மலையில் ரோப் கார் அமைவதற்கு சாத்தியகூறுகள் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சாத்தியகூறு அடிப்படையில் மலை அடிவாரத்தில் லோயர் ஸ்டேஷன், மலை உச்சியில் ஹையர் ஸ்டேசன் அமைய கூடிய இடங்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் நேற்று கோவில் துணை கமிஷனர் சுரேஷ், வரையாளர் ராமர் மற்றும் மின்தொழில் நுட்ப வல்லுனர் மலைக்கு சென்று ரோப்கார் அமைப்பது தொடர்பாக படிக்கட்டுப் பாதை வழியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் மலையில் உள்ள இடிதாங்கி செயல்பாட்டின் தன்மையையும், மின்னல், இடியின் ஒலியை தாங்கும் விதமாக பூமிக்கடியில் எர்த் அமைப்பது தொடர்பாகவும் கூடுதலாக இடிதாங்கி அமைப்பது தொடர்பாக இடங்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் ெகால்கத்தாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பிறகே "ரோப்கார்" அமையும் உறுதிநிலை தெரியவரும் என்று கோவில் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


Related Tags :
Next Story