இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி


இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி
x

இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகள் என்ன சொல்லுகிறதோ அதன்படி தான் துறை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசின் சீரிய வழிகாட்டுதலின்படி எங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறி செயல்படுகிறது என்றால் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம்.

அதற்குண்டான பதிலை துறையின் சார்பில் அளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் வெளிப்படை தன்மையோடு தவறுக்கு இடம் தராமல் பக்த கோடிகளுக்கு தேவையான வசதிகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த சொல்லி உத்தரவிட்டு இருக்கின்றார், அந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம்.


தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக்கொள்ளவும் இந்த அரசு தயாராக இருக்கின்றது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா?. குறைகள் எதுவாக இருந்தாலும் சுட்டிக்காட்டினால் அதை சரி செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பொறுத்தவரை விஐபிகள் தரிசனத்தை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட பாஸ்களின் எண்ணிக்கையில் 20 சதவீதத்தை இந்தாண்டு குறைத்திருக்கிறோம். தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதிகள் போன்ற அனைத்து வசதிகளையும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

திமுக தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பின் இதுவரையில் சுமார் 240 கோடி ரூபாய் வாடகை வசூலும், ஆக்கிரமிப்பிலிருந்து சுமார் 3800 கோடி ரூபாய் சொத்துகளும் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் ஒரே நாளில் திண்டுக்கல்லில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story