மேயர் தலைமையில் பகுதிசபா கூட்டம்


மேயர் தலைமையில் பகுதிசபா கூட்டம்
x

சேலம் மாநகராட்சி 6-வது வார்டில் மேயர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது.

சேலம்

சேலம் மாநகராட்சி 16-வது வார்டில் செட்டிச்சாவடி சாலையில் வார்டு கமிட்டி, பகுதிசபா கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசுகையில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து அதை நிறைவேற்றி கொடுப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் பொதுமக்களின் குறைகளை எடுத்து கூறுவதற்கு பகுதிசபா கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.

இதையடுத்து மேயரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். அப்போது அவர்கள் தெரிவித்திருந்த சாலை அமைத்தல், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சுபாஷ் சுந்தர் உள்பட கலந்து கொண்டனர்.


Next Story